முன்பெல்லாம் மொபைல் போன்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திடீரென கீழே விழுந்தாலோ அல்லது எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டாலோ அவ்வளவுதான். அதோடு அந்த போனை மறந்துவிட வேண்டியதுதான்.
தண்ணீரில் விழுந்த போனை சரிசெய்ய முடியாது. கீழே விழுந்த போன் உடைந்து அதனுடைய பாகங்கள் (cellphone parts) சேதமடைந்துவிடும். அதை சரி செய்ய கடைக்குக் கொண்டு சென்றாலும், புதிய போன் விலையளவிற்கு ரிப்பேர் செய்வதற்கான தொகையை வசூலித்துவிடுவார்கள். அப்படி சரிசெய்யப்பட்ட போனும் அடிக்கடி ஏதேனும் பிரச்னை செய்துகொண்டே இருக்கும்.
இத்தனை செலவுகள் செய்வதற்கு புதிய போனையே வாங்கிவிடலாம். நடைமுறை வாழ்க்கையில் மொபைல் தண்ணீரில் விழுவது, தண்ணீரில் நனைவது, கீழே விழுவது போன்ற செயல்களைத் தடுக்கவே முடியாது. தவறுவது இயல்பு.
இவையனைத்தும் சரிசெய்து எதிர்காலத்தில் இப்பிரச்னையை சமாளிக்ககூடிய நவீன ரக மொபைல்போன்களை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ளது மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகி விற்பனையில் முன்னணி வகிக்கும் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா வகை ஸ்மார்ட் போன்களைக் குறிப்பிடலாம்.
தண்ணீருக்குள்ளேயே படம் பிடிக்கலாம். தண்ணீருக்குள்ளே ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற வசதிகளைக் கொண்ட போன்கள் வாட்டர்ப்ரூப் டெக்னாலஜியைப் (Water proof technology) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.
முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற "வாட்டர் ப்ரூப் மொபைல்போன்களை" வெளியிட்டுள்ளன.
1. Sony Xperia Z1 - விலை ரூபாய் 42,990
2. Sony Xperia Actuve - விலை ரூபாய் 15,681
3. Sony Xperia Acro S - விலை ரூபாய் 21,990
4. Samsung Galaxy x cover 2 - விலை ரூபாய் 22,319
5. Motorola Defy Plus - விலை ரூபாய் 12,250
6. Sony Xperia Go - விலை ரூபாய் 12,295
7. Sony Xperia ZR - விலை ரூபாய் 26,815
8. Sony Xperia z ultra - விலை ரூபாய் 40,590
9. Sony Xperia z - விலை ரூபாய் 30,990
10. Sony Xperia ZL - விலை ரூபாய் 26,990
All Are Indian Price.
மேற்கண்ட ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் வாட்டர் ஃப்ரூப் போன்கள். தண்ணீரீல் நனைவதால் எந்த பிரச்னையும் இப்போன்களுக்கு ஏற்படுவதில்லை. இவைகள் amazon.in, snapdeal, flipkart போன்றஆன்லைன் ரீடெய்ல் ஸ்ரோட்களில் கிடைக்கும். தளத்திற்கு தளம் விலைகள் சற்று மாறுபடும்.
0 comments:
Post a Comment