Sunday, December 22, 2013

நோக்கியா ஆஷா 210

நோக்கியா, தன்னுடைய ஆஷா வரிசை மொபைல்களை தொடர்ந்து வெளியிட்டு விற்பனையில் சாதனை செய்துகொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்பொழுது புதிய இரண்டு சிம் பயன்பாடுள்ள Nokia Ahsa 210 என்ற பட்ஜெட் போனை வெளியிட்டுள்ளது. 

நோக்கியா ஆஷா 210 சிறப்பம்சங்கள்:


இதன் பரிமாணம் 111.5x60.11.8 மில்லிமீட்டர். பார் டைப்பில் உள்ள இப்போனில், 2.4 அங்குல அகல திரை, லவுட்ஸ்பீர்க்கர் 3.5, 32 ஜிபி அளவு வரைக்கும் மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 64 எம்பி ராம் மெமரி வசதி, லவுட்ஸ்பீக்கர, 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுளது. 

நெட்வொர்க் கனெக்டிவிட்டிப் பயன்பாடுகளுக்கு புளூடூத், ஜிபிஆர்எஸ், எட்ஜ் ஆகிய நுட்பங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

கேமரா வசதி


வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க போதுமான 2 மெகா பிக்சல் திறன்கொண்ட கேமராவும் உண்டு. ரெக்கார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்கள் (MP3, WAV, WMA, AAc, MP) சப்போர்ட் செய்கிறது. 

பேட்டரி


இவை அனைத்திற்கும் தேவையான மின்சக்தியை வழங்குவதற்கும், தொடர்ந்து 12 மணி நேரம் பேசுவதற்கு போதுமான மின்சக்தி தேக்குதிறன் கொண்ட  1,200 mAH திறன் பேட்டரியும் இதில் உண்டு. ஒரு முறை சார்ஜ் செய்தால் 55 மணி நேரம் வரைக்கும் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்ட பேட்டரி இது. 

ஆங்கிலத்தில்: 

Nokia Asha 210 mobile Specs and price

2.4 inch screen
Dual SIM Dual Standby (GSM + GSM)
32 MB storage capacity
64 MB RAM
1000 Contacts
MicroSD upto 32 GB
FM Radio with recording option

0 comments:

Post a Comment