Saturday, December 21, 2013

கூகிள் நெக்சஸ் 5 இப்பொழுது ஆன்லைனில்..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போன் தற்பொழுது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பிரபல ஆன்லைன் விற்பனை ஸ்டோர் பிலிப்கார்ட்டில் விற்பனைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போன் குறித்த தகவல்கள் ஏதும்   அத்தளத்தில் கிடைக்கவில்லை...

ஆனால் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் கூகிள் நெக்சஸ் 5 போன் விற்பனைக்கு கிடைக்கிறது. 

image credit: google play store

16GB Nexus White போன் ரூபாய் 28999 க்கும், 32GB Nexus Smartphone ரூபாய் 32,999க்கும் கிடைக்கிறது. 

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான உறைகள் Nexus 5 Bumper case  (white and grey) ரூபாய் 2499 க்கும்,  LG Nexus 5 Quick cover ரூபாய் 3299 க்கும் விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெக்சஸ் 5 போன்கள் மேற்குறிப்பிட்டபடி இரண்டு வகைகளாக கிடைக்கிறது. 

உங்கள் நினைவிற்காக இப்போனில் இடம்பெற்றுள்ள முக்கியமான சிறப்பு கூறுகள்: 

google nexus 5 Main 4 specs: 


  • Slimmer, lighter design.
  • Speed and power to spare.
  • Stunning 5” display.
  • Powered by Android 4.4, KitKat.

இப்போன்களைப் பற்றிய முழுமையான தகவல்களுக்கு: 


இதே போன்களை பிரபலமான இந்திய ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு ஆன்லைன் ஸ்டோர்களிலும் இப்போன்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக எந்த தகவல்களும் இல்லை. 

மற்ற வர்த்தக தளங்களின் மூலம் வாங்குவதை விட கூகிள் பிளே ஸ்டோர் மூலம் கூகிள் நெக்சஸ் 5 போன்களை வாங்குவது சிறந்தது. காரணம் மற்ற தளங்களில் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் அதிகமாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூகிள் பிளே ஸ்டோரில் சரியான விலையைக் குறிப்பிட்டுள்ளனர். 

விருப்பமுள்ளவர்கள் கூகிள் பிளே ஸ்டோர் சென்று ஆன்லைன் மூலம் கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனினை வாங்கிடலாம். 

இந்த தகவல் கூகிள் நெக்சஸ் 5 போன் வாங்க நினைத்துள்ளவர்களுக்கு நிச்சயமாக பயன்படும் என நம்புகிறேன். 

0 comments:

Post a Comment