Saturday, December 21, 2013

பிளாக்கரில் Popup window அமைப்பது எப்படி?

பிளாக்கரில் பாப்அப் விண்டோ அமைப்பது எப்படி?

முதலில் பாப்அப் விண்டோ(Popup Window) என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம்.

POPUP WINDOW IN BLOGGER
நீங்கள் ஒரு தளத்தைத் திறக்கும் போது அந்த பக்கத்தில் மேலெழுந்து ஒரு பெட்டி தோன்றுமாறு செய்திருப்பார்கள். அதற்கு பாப்அப் விண்டோ என்று பெயர். உதாரணமாக பிரபல வலைத்தளங்களை நாம் திறக்கும்போது விளம்பரம் தோன்றச் செய்வதற்காக இவ்வகை பாப்அப் பெட்டிகளை(POPUP-WINDOWS) நாம் பார்த்திருப்போம். 

தினகரன், தினமலர், ஆனந்த விகடன், தட்ஸ்தமிழ் போன்ற செய்தித் தளங்களில் இவ்வாறான பாப் அப் விண்டோக்கள் தோன்றி மறைவதைப் பார்த்திருப்பீர்கள்.


நம் பிளாக்கர் தளத்திலும் இவ்வாறான Popup Window-க்களை தோன்றச் செய்யலாம். 

Popup window-க்களை பிளாக்கரில் தோன்றச் செய்வது எப்படி? 

இது மிக சுலபம். இதற்கான நிரல்வரிகளை நீங்கள் உங்கள் பிளாக்கர் தளத்தில் சேர்த்தாலே போதும். 

Popup Window விற்கான நிரல்வரிகள்: 

<!-- This Script is from www.thangampalani.com, Coded by: ThangamPalani-->
<script>
// Popup window code
function newWindow(url) {
popupWindow = window.open(
url,
'popUpWindow',
"height=500,width=450,left=100,top=100,resizable=yes,scrollbars=yes,toolbar=yes,menubar=no,location=no,directories=no,status=yes")
}
newWindow('http://www.thangampalani.com');
</script>

<font face="Tahoma"><a target="_blank" href="http://www.thangampalani.com/"><span style="font-size: 8pt; text-decoration: none">Get Free HTML Code</span></a></font>


மேற்கண்ட நிரல்வரகளை copy செய்துகொண்டு, உங்கள் பிளாக்கரில் Page Element==>add gadget==>HTML/Javascript சென்று Pase செய்துகொள்ளுங்கள். 

பிறகு newWindow('http://www.thangampalani.com'); என்பதில்

http://www.thangampalani.com

என்பதற்கு பதிலாக Popup-window வாக நீங்கள் காட்டவிருக்கும் பக்கத்தின் URL- கொடுக்கவும்.

Popup window-வின் நீள, அகலங்களை நிர்ணயம் செய்ய height=500,width=450என்பதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

பாப்அப் விண்டோ வலைப்பக்கத்தின் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய left=100,top=100 என்பதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

இறுதியாக செய்த மாற்றத்தை சேமித்துக்(Save)கொள்ளுங்கள். 

முடிந்தது. இனி ஒவ்வொரு முறையும் உங்கள் வலைத்தளம் திறக்கப்படும்போது இந்த Popup window திறக்கும். 

0 comments:

Post a Comment