Saturday, December 21, 2013

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!!

வலைப்பதிவுகள் (Blogs)

blog storyஒரு காலத்தில் அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே எழுத்துத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன.. எதையேனும் வாசிக்க வேண்டுமெனில் அச்சுப் பத்திரிகைகளையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் நிலவியது.. இணையம் (Internet) வந்த பின் அந்த நிலை மாறியது.. இணையப் பக்கங்கள் தகவல்களைப் பரிமாற்றும் தளங்களாக உருவெடுக்கக் துவங்கின. பத்திரிகைகளும், அதன் ஆசிரியர்களும் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியது.

யாரோ எழுதுவதை அச்சிலும் வாசிக்கிறோம்: இணையத்திலும் நமது சிந்தனைகளை எழுதவதற்குரிய வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையின் விளைவுதான் வலைப் பதிவுகள். நமது மனதில் தோன்றும் விஷயங்களை நாட்குறிப்பில் எழுதி பாதுகாத்து வைப்பது போல, இணையப் பக்கத்திலும் எழுதி வைத்துக்கொள்ளலாம் என்பது அடிப்படை நோக்கம்..

ஒரு வகையில் இதை இணைய நாட்குறிப்பு (Net Diary) என்று கூட சொல்லலாம். ஆனாலும் நாட்குறிப்புக்கும், வலைப் பதிவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் வலைப்பதிவு என்பது தனி நபர்களால் நிர்ணயிக்கப்படுகின்ற இணையத்தளம். இதற்கு வலைப்பூ, வலைக்குடில், வலைக் குறிப்பு, வலைமனை என சில பெயர்களும் உண்டு. இதில் அந்த நபர் தனக்கு விருப்பமானக் கருத்துகள், படைப்புகள், படங்கள், வீடியோக்கள் என வலைப் பதிவின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இதை பிளாக் (Blog) என்றார்கள். அந்த வார்த்தை வந்த கதையே சுவராஸ்யமானது.


  • ஜான் பர்கர் என்பவர் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி (வெப்ளாக்) Weblog என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார். 
  •  1999-ஆம் ஆண்டு பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பவர் தனது பீட்டர்மி.காம்(peterme.com) வலைத் தளத்தில் weblog என்பதை நகைச்சுவைக்காக we blog என இரண்டாகப் பிரிந்து எழுதி வைத்தார். 
  • அதைப் பார்த்த பைரா லேப்ஸில் பணியாற்றி வந்த ஈவன் வில்லியம்ஸ் என்பவருக்குப் பொறி தட்டியது. அவர் வெறுமனே 'பிளாக்' என்று ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டார்.
  •  'பிளாக்' என்றால் எழுதுவது எனப் பொருள் கொடுத்து எழுதுபவரை பிளாகர் (blogger) என்று அழைத்தார். 
  •  அப்படி அவர் ஆரம்பித்த பிளாகர் தான் இன்று உலகமெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போனது.


அதற்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த வலைப் பதிவுகள் ஒரு சின்னத் தகவல் பலகையாகவோ, சின்ன குழுக்களின் விஷயங்களைப் போடும் ஒரு இடமாகவோதான் இருந்தன. பிளாகர் தான் வலைப் பதிவை எளிதாக்கி உலகெங்கும் பரவலாக்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு முக்கியமான தளங்கள் இருந்தன. அது ஓப்பன் டைரி மற்றும் லைவ் ஜெர்னல்.

1996 - ஆம் ஆண்டு ஓப்பன் டைரி (open Diary) என்றொரு தளம் ஆரம்பமானது. இதை ஆரம்பித்தவர் புரூஆ அப்லீசன் என்பவர். அது இந்த பிளாகருக்கு முன்னோடி என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களுக்கும் இதுவே முன்னோடி என்று சொல்வதிலும் தவறில்லை. இதன் செயல்பாடு என்னவென்றால் டைரி எழுத விருப்பமுள்ளவர்களெல்லாம் இதில் இணைந்து ஆன்லைன் டைரி எழுதிக் கொள்ளலாம் என்பதுதான். ஓப்பன் டைரி.காம் அறிமுகமான பின் பரவலான கவனத்தைப் பெற்றது. இதுவரை இதில் எழுத்ப்பட்ட டைரிகள் ஐம்பது இலட்சத்திற்கும் மேல். 

ஓப்பன் டைரி திறந்து விட்ட சிந்தனைக் கதவு வழியாக அடுத்த ஆண்டே பிராட்ஃபிட்ஸ்பேட்ரிக் நுழைந்தார். இவர் அறிமுகப்படுத்தியது லைவ்ஜெர்னல்.காம் (Livejournal.com) எனும் தளம். இதில் டைரியும் எழுதலாம். பதிவுகளும் எழுதலாம். அல்லது பத்திரிகைச் செய்திகளையும் எழுதலாம் என அதிக வசதிகள் தரப்பட்டது.

live journal logo


தனது பள்ளிக்கூட நண்பர்களுக்கு தான் செய்பவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கத்தில் தான் முதலில் இதை ஆரம்பித்தார். பின் அது எங்கும் பிரபலமாகிப் போனது வேறு விஷயம்.

இதற்குப் பின் வந்தது தான் இன்றைக்குப் பிரபலமாகியிருக்கும் பிளாகர் தளம். 1999 - ஆம் ஆண்டு அறிமுகமானாலும் சூடு பிடிக்க ஆரம்பித்ததென்னவோ 2002 இல் தான். பலரும் வலைப் பதிவு செய்ய ஆரம்பிக்க, பிளாக்கரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஆண்டே அதை கூகிள் நிறுவனம் வாங்கிவிட்டது!

முதலில் வெறுமனே தனிநபர் உரையாடல்களால் இருந்த வலைப் பதிவுகள் அதன் உண்மையான வீச்சைப் புரிந்து கொண்டபின் பல வகைகளிலும் பயன்பட ஆரம்பித்தது. குறிப்பாக அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரத்தில் செலவில்லாத ஒரு விளம்பர உத்தியாகவும், தகவல் பறிமாற்றுத் தளமாகவும் வலைப் பதிவுகள் செய்லபட ஆரம்பித்தன. 

பிரிட்டன் லேபர் கட்சித் தலைவர் டாம் வாட்சன் ஆரம்பித்த வலைப்பூ அரசியல் வலைப்பூ அரசியல் வலைப்பதிவுகளுக்கு ஒரு முன்னோடி எனலாம்.வலைப்பதிவுகள் கொடி கட்டிப் பறப்பதைக் கண்ட இஸ்ரேல் அரசு சொந்தமான வலைப்பதிவை அரசு சார்பாகவே நடத்தியது.

blogger logo

முதன்முதலாக அரசு சார்பாக ஒரு வலைப்பதிவை உருவாக்கிய பெருமை இஸ்ரேலுக்கு உண்டு. அந்தக் காலகட்டத்தில் வேறு சில அரசுகளும் அரசு சார் வலைப்பதிவுகளில் இறங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment