உலகின் மிக பிரபலமான தேடல் இயந்திர இணையதளம் கூகிள். இந்நிறுவனம் தரும் இலவச வசதிகள் எண்ணற்றது. ஜிமெயில், பிளாக்கர், யூடியூப், Google Drive, Calendar, Search, Image, Google Play போன்ற பல்வேறுபட்ட இலவச வசதிகளை பயனர்களுக்குத் தருவதோடு, ஆண்ட்ராய்ட் இயங்குதளம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப் என்று பல்வேறு சாதனங்களையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் சாம்சங் குரோம்புக் என்ற புதிய லேப்டாப்பை வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
இதற்கு முன்பு Acer Chromebook, HP ChromeBook ஆகியவைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூன்றாவதாக வெளியிடப்பட்ட இந்த சாம்சங் லேப்டாப்பில் குரோம் புக் ஓ.எஸ் இயங்குகிறது.
இதில் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் புரோகிராம்களை இயக்கவியலாது.
சாம்சங் குரோம்புக்கில் உள்ள சிறப்பம்சங்கள்:
11.6 அங்குல திரை, 1.7GHz Exynos 5 டூயல் பிராசசர் , குரோம்புக் 2ஜிபி, எஸ்எஸ்டி 16GB, 1.1 கிலோகிராம் எடை, லேப்டாப்பில் உள்ள அனைத்து கணினிப் பகுதி உறுப்புகளுக்கும் மின்சாரத்தை வழங்க கூடிய சக்தி மிக்க பேட்டரி அமைந்துள்ளது.
Samsung Chromebook specification
- வேகமாக செயல்புரியும் தன்மை.
- விரைவான இணைய செயல்பாடு...
- Multiple layers பாதுகாப்பு
- web based பணிகளுக்கு மிகச்சிறப்பானதொரு கம்ப்யூட்டர் இதுவாகும்.
- இதை இணைய இணைப்பில் இணைக்கும்பொழுது சிறப்பாக செயல்படுகிறது.
- Cloud முறையில் சேமிக்கும் வசதியும் இதிலுண்டு.
0 comments:
Post a Comment