இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்கள் பெரும்பாலும் தமிழில் எழுதவே நினைக்கின்றனர். ஆனால் தமிழ்த்தட்டச்சு தெரியாததால் தமிழில் தட்டச்சிடுவதற்கு தயங்குகின்றனர். அதனால் கூகிள் தேடலில் கூட ஆங்கிலத்தையே, ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தியே தமிழில் தமிழைப் போன்று தட்டச்சிட்டு தேடுகிறார்கள்.
உதாரணமாக "தமிழில் எழுத" என கூகிள் சர்ச்சில் தேடுவதற்கு "Tamilil Elutha" என உள்ளிட்டு தேடுகின்றனர்.
அக்கா என்பதற்கு ஆங்கிலத்திலேயே Akka என உள்ளிடுகின்றனர்.
இவ்வாறு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தியே தமிழில் தட்டச்சிட முயல்கின்றனர். அவ்வாறு இல்லாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி தமிழில் எழுத முடியும். தமிழ் வார்த்தையின் உச்சரிப்புக்குரிய ஆங்கில எழுத்துகளை உள்ளிடும்பொழுது அவைகள் தமிழ் வார்த்தைகளாக மாற்றம் அடைகின்றன.
இந்த முறையால் தமிழ் எழுத்துக்களைப்பெற்று வார்த்தைகளாக மாற்ற முடியும்.
தமிழில் எழுத பயன்படும் மென்பொருட்கள்:
1. Azhagi
2. google transliteration
3. e-kalappai
4. Nhm writer
மேற்கொண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தி தமிழில் எழுத முடியும். உதராணத்திற்காக மட்டுமே மேற்கொண்ட மென்பொருட்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ்மொழியில் எழுதுவதற்கு பல மென்பொருட்கள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட மென்பொருட்களின் மூலம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு, தமிழில் எழுதலாம். அல்லது அந்த மென்பொருட்களில் இடம்பெற்றுள்ள "தமிழ் உள்ளிடும் தட்டச்சு விசைகளை அறிந்துகொண்டு, அதன் மூலம் நேரடியாகவே தமிழில் தட்டச்சிடலாம்.
ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சிடும் முறையை அவசர காலச் சூழலில் தட்டச்சிடலாம். அதையே நிரந்தரமாக பயன்படுத்துதல் கூடாது.
அந்தந்த மென்பொருட்களில் இடம்பெற்றுள்ள தமிழ்விசைகளை அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு தட்டச்சிட பழகிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தட்டச்சிடும் முறையால் வருங்கால சந்ததியினர் தமிழ் இன எழுத்துகளை எழுத்துவதற்கு சிரம்ப்படுவதோடு, எதிர்காலத்தில் தமிழ் வடிவ எழுத்துக்களும் மறந்து போகும் வாய்ப்பு ஏற்படும்.
உண்மையான தமிழ் எழுத்துருக்களை மறந்து amma என்றாலே அம்மா என்று நிலை ஏற்பட்டுவிடும்.
இந்நிலை மாற என்ன செய்வது...?
முன்பு நான் கூறியதுபோல தமிழில் தட்டச்சிட மென்பொருட்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதெனில் அழகி மென்பொருளைக் கூறலாம். இளைய தலைமுறையினர் அழகிப் போன்று உள்ள மென்பொருள்களில் இடம்பெற்றிருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, தமிழ் விசைகள் அனைத்தையும் கற்றறிந்து, நேரடியாகவே தமிழில் தட்டச்சிடுதல் வேண்டும்.
அப்பொழுதுதான் கணினி தமிழ் வளரும்.
0 comments:
Post a Comment