கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும்.அது மட்டும் அல்லாது நமக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருட்களையும் தேடி பெற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது சிக்கல் இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.
இத்தளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு ஒரு மென்பொருள் பட்டியல் தோன்றும்., அதில் தேவையானவற்றை தெரிவு செய்த பின் Get Installer என்பதை சொடுக்கவும். உங்களுக்கு கிடைக்கும் Setup நிறுவ ஆரம்பிக்கவும். இதற்கு இணைய இணைப்பு அவசியமாகும்.
நன்றி
ReplyDelete