Mobile charger பிரச்னைகள்
வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வெவ்வேறு மொபைல் சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வது என்பதும் ஒரு சிரமமான விடயம்தான். ஒவ்வொருவரும் மொபைலுக்கும் அதற்குரிய Battery Charger -ஐ பயன்படுத்த வேண்டும்.
ஆனால் வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கான மின்இணைப்பு பெட்டிகள் இருப்பதில்லை.
அல்லது மல்டிபிள் சார்ஜிங் கேபிளைப் (Multiple Charging Cable) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பவர்மேனேஜ்மெண்ட் (Power management) சரியாக இருந்தால்தான் இத்தகைய கேபிள்கள் சரியாக செயல்படும்.
Ocatfire mobile charger specs
ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய புதிய சாதனம் (Multiple Mobile charging Device) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தானாகவே இணைக்கபடும் சாதனத்திற்கேற்ற வகையில் மின்சாரத்தை செலுத்தி சார்ஜ் செய்யக்கூடிய வகையில் (Automatic Power Management) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் எட்டு வகையான வெவ்வேறு சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பேட்டரி சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
Ocatfire எனப் பெயரிடபட்டுள்ள இச்சாதனம் 100-240வ, 47-63HZ மின்சாரத்தில் செயல்படக்கூடியது. 2.1A/5V வெளியிடக்கூடியதாக உள்ளது. விரைவில் இச்சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.
இனி வீட்டில் உள்ள அனைவருடைய வெவ்வேறு மொபைல் சாதனங்களையும் ஒரே நேரத்தில் Charge செய்துகொள்ள முடியும். Charger Problem என்பது இனி உங்கள் வீட்டில் இருக்காது.
0 comments:
Post a Comment