ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.
ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.
ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
Android OS Specification
- நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
- வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.
- ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
- கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
- குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
- ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
How to Use Android OS Device
உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
0 comments:
Post a Comment