நீங்கள் பயன்படுத்தும் பிரிண்டர் வேகம் குறைவா இருக்கா? ஒவ்வொரு பிரிண்ட்க்கும் காத்திருப்பது எரிச்சலைத் தருகிறதா?
இதோ உங்கள் பிரிண்டரை வேகப்படுத்த ஒரு எளிய தீர்வு...
- முதலில் ஸ்டார்ட் பட்டனை தட்டுங்கள்
- செட்டிங்சில் பிரிண்டர் அன்ட் பேக்ஸ் கிளிக்செய்யுங்கள்
- அதில் நீங்கள் பயன்படுத்தும் பிரிண்டர் ஐகான் தோன்றும். (எனது பிரிண்டரின் பெயர் HP DEskjet 1050 j410 series)
- அதன்மீது மௌஸ்பாய்ண்டரை வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.
- பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள்...
- தோன்றும் பெட்டியில் அட்வான்ஸ்ட் என்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
- அதில் பிரிண்ட் டைரக்ட்லி டு தி பிரிண்டர் என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.
- இறுதியில் ok கொடுத்து வெளியேறுங்கள்.
சந்தேகத்திற்கு கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.
குறிப்பு: பிரிண்டர் அவுட்புட் கிடைக்க தாமதவாதற்கு பிரிண்டர் ஸ்பூலர் (Print spooler) என்ற அமைப்பும் ஒரு காரணம். இது பிரிண்ட் கொடுத்த டாக்குமென்ட்டை சிறிது நேரம் தன்வசத்தில் வைத்திருந்து பிறகே பிரிண்ட் அவுட்புட் கிடைக்கச் செய்யும். இந்த ஆப்சனை டிசேபிள் செய்துவிட்டால் பிரிண்ட் எடுக்கும் வேகம் அதிகரிக்கும். ஒவ்வொரு பிரிண்டரிலும் இந்த ஆப்சன் "Enable" செய்யப்பட்டிருக்கும்.
நான் குறிப்பிட்ட இப்படங்கள் மற்றும் செட்டிங்ஸ் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் பரீசித்துப் பார்த்து எடுக்கப்பட்டவை.
0 comments:
Post a Comment