Monday, December 30, 2013

வாட்டர் புரூப் மொபைல்போன்கள் - ஒரு பார்வை (விலைப் பட்டியலுடன்)

முன்பெல்லாம் மொபைல் போன்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திடீரென கீழே விழுந்தாலோ அல்லது எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டாலோ அவ்வளவுதான். அதோடு அந்த போனை மறந்துவிட வேண்டியதுதான்.

தண்ணீரில் விழுந்த போனை சரிசெய்ய முடியாது. கீழே விழுந்த போன் உடைந்து அதனுடைய பாகங்கள் (cellphone parts) சேதமடைந்துவிடும். அதை சரி செய்ய கடைக்குக் கொண்டு சென்றாலும், புதிய போன் விலையளவிற்கு ரிப்பேர் செய்வதற்கான தொகையை வசூலித்துவிடுவார்கள். அப்படி சரிசெய்யப்பட்ட போனும் அடிக்கடி ஏதேனும் பிரச்னை செய்துகொண்டே இருக்கும். 

இத்தனை செலவுகள் செய்வதற்கு புதிய போனையே வாங்கிவிடலாம். நடைமுறை வாழ்க்கையில் மொபைல் தண்ணீரில் விழுவது, தண்ணீரில் நனைவது, கீழே விழுவது போன்ற செயல்களைத் தடுக்கவே முடியாது. தவறுவது இயல்பு.

sony xperia z1 water proof smartphone with 3000 mAh battery


இவையனைத்தும் சரிசெய்து எதிர்காலத்தில் இப்பிரச்னையை சமாளிக்ககூடிய நவீன ரக மொபைல்போன்களை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ளது மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள். 

அந்த வகையில் தற்பொழுது வெளியாகி விற்பனையில் முன்னணி வகிக்கும் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா வகை ஸ்மார்ட் போன்களைக் குறிப்பிடலாம். 

தண்ணீருக்குள்ளேயே படம் பிடிக்கலாம். தண்ணீருக்குள்ளே ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற வசதிகளைக் கொண்ட போன்கள் வாட்டர்ப்ரூப் டெக்னாலஜியைப் (Water proof technology) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. 

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற "வாட்டர் ப்ரூப் மொபைல்போன்களை" வெளியிட்டுள்ளன. 

1. Sony Xperia Z1  - விலை ரூபாய் 42,990
2. Sony Xperia Actuve  - விலை ரூபாய் 15,681
3. Sony Xperia Acro S - விலை ரூபாய் 21,990
4. Samsung Galaxy x cover 2 - விலை ரூபாய் 22,319
5. Motorola Defy Plus  - விலை ரூபாய் 12,250
6. Sony Xperia Go  - விலை ரூபாய் 12,295
7. Sony Xperia ZR  - விலை ரூபாய் 26,815
8. Sony Xperia z ultra  - விலை ரூபாய் 40,590
9. Sony Xperia z  - விலை ரூபாய் 30,990
10. Sony Xperia ZL  - விலை ரூபாய் 26,990

All Are Indian Price.

மேற்கண்ட ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் வாட்டர் ஃப்ரூப் போன்கள். தண்ணீரீல் நனைவதால் எந்த பிரச்னையும் இப்போன்களுக்கு ஏற்படுவதில்லை. இவைகள் amazon.in, snapdeal, flipkart போன்றஆன்லைன் ரீடெய்ல் ஸ்ரோட்களில் கிடைக்கும். தளத்திற்கு தளம் விலைகள் சற்று மாறுபடும்.

Universal Soldier Tamil Dubbed Movie




NHM Writer - ஒரு மிகச்சிறந்த தமிழ் டைப்பிங் மென்பொருள்

nhm writer free tamil typing softwareகணினியில் தமிழ் தட்டச்சிடப் பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer.

New Horizon Media நிறுவனத்தாரின் தயாரிப்பு இது.

நியூ ஹாரிசான் நிறுவனமானது ஒரு பதிப்பகம். உலகளவில் தமிழ் மட்டுமல்லாது, பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் அளப்பரிய பணியைச் செய்யும் ஓர் நிறுவனம். 

தனது புத்தக தயாரிப்பு பணிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அருமையான இம்மென்பொருளை, உலகத் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கி பெருமை சேர்த்திருக்கிறது.

தற்பொழுது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளை மேன்படுத்தி புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இம்மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளார்கள்.

NHM Writer - மென்பொருள்: 


இந்த மென்பொருள் மூலம் தமிழ் 99 முறையில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சிடலாம். போனோடோனிக் முறை என்று சொல்லக்கூடிய ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை தட்டச்சிடலாம்.

அதாவது amma = அம்மா என தட்டச்சிடலாம்.

உங்களுக்குத் தெரிந்த பாமினி, வானவில் போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தியும் தமிழில் தட்டச்சிடலாம்.

பாமினி, தமிழ் தட்டச்சு, போன்ற உங்களுக்குத் தெரிந்த தமிழ் தட்டச்சு முறையிலேயே யுனிக்கோட் எழுத்துருக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.  


தமிழ் மொழி மட்டுமல்ல.. இந்திய மொழிகளான Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Punjabi மற்றும் Telugu ஆகிய மொழிகளில் தட்டச்சிடலாம் என்பது சிறப்பான விடயம். 

Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera போன்ற அனைத்து உலவிகளிலும் இம்மென்பொருள் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுக்கிறது. 

1MB அளவே கொண்ட இந்த மென்பொருள் விரைவாக தரவிறங்குகிறது. தரவிறங்கிய வேகத்திலேயே இதை கணினியில் நிறுவவும் செய்யலாம். மிகச்சிறந்த வேகத்தில் தொழிற்படுகிறது. 

விண்டோஸ் சிடி இல்லாமலேயே Regional Language Support செய்யும் வசதி..
 Windows 2003/XP, Windows Vista, Windows 7 மற்றும் தற்பொழுது புதியதாக வெளிவந்துள்ள  Windows 8 ஆகிய இயங்குதளங்கள் கொண்ட கணிகளில் நன்றாக தொழிற்படுகிறது. 

விண்டோஸ் டெக்ஸ்ட் சர்வீஸ் வசதி மூலம் MS Office ல் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்யலாம். 

DTP தொழில் செய்பவர்களுக்கு தொழில் ரீதியாக பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் இது. 

கணினியில் தமிழில் தட்டச்சிட விரும்பும் புதியவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். 

NHM Writer மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி
Downlaod !

இந்த இணைப்பில் சென்று டவுன்லோட் என்று இருக்கும் இணைப்பைச் சுட்டி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

இதை கணினியில் இன்ஸ்டால் செய்வதும் மிகச் சுலபம்தாம்.

இனி கணினியில் இனிய தமிழில் தட்டச்சிடுவது என்பது அனைவருக்குமே சாத்தியமான ஒன்று. கணினி பயன்படுத்துபவர்கள் அனைவரும் தமிழிலேயே தட்டச்சிட மென்பொருளை வடிவமைத்து வழங்கிய என்.எச்.எம். நிறுவனத்தாருக்கு நன்றி.

Computer RAM - ஐ பாதுகாக்கும் மென்பொருள்

கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.

இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.

ram-optimizer-for-your-pc


விண்டோஸ் இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது. இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது. 


இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:

http://www.maxpcsecure.com/maxramoptimizer/

Max RAM Optimizer Smart Features :


  1. Max RAM Optimizer provides fully Automation option. You don’t need to monitor your pc continuously. Max RAM Optimizer does this for you. 
  2. Whenever your pc’s memory goes below to a limit selected by you, it will increase available physical memory automatically moreover you have also option to optimize your pc’s memory on regular intervals.
  3. Max RAM optimizer provides several features to facilitate optimization process. You can start optimizing when you start windows. You can move it to system tray at your option, being in system tray it continuously monitors your pc. 
  4. After optimization process, you can see in the optimization report how much memory has been released in this optimization process. Option for clearing clipboard content also has been provided.
  5. Ultimately, Max RAM Optimizer is very user friendly which removes the tension of your pc’s memory from your memory. So use the Max Ram Optimizer and free your memory from the problems of your pc’s memory.  

Sunday, December 29, 2013

Training Day Tamil Dubbed





ஸ்மார்ட்போன்களில் Sensor தொழில்நுட்பம்


Sensor Technology என்றால் என்ன? 


இன்று ஸ்மார்ட்போன்களில் இத்தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சென்சார் தொழில்நுட்பத்தை தமிழில் "உணர்வலை" தொழில்நுட்பம் எனலாம். ஏதாவது ஒரு புற்காரணியின் மூலம் தூண்டுதலைப் பெற்று, அந்த தூண்டலுக்கேற்ப செயல்படும் நுட்பம் சென்சார் தொழில்நுட்பமாகும். 

சென்சார் தொழில்நுட்பத்தின் செயல்பாடு: 


சென்சார் தொழில்நுட்பமானது ஒரு தூண்டுலைப் பெற்று அதற்கேற்ற வகையில் இயங்கும். அந்த தூண்டுதலானது வெப்பமாக இருக்கலாம். ஒளியாக இருக்கலாம். ஏன் அது ஒரு ரேடியோ அலையாக கூட இருக்கலாம். 
smartphone sensors
இவற்றில் எந்த ஒரு காரணியும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும்பொழுது, அதை உணர்ந்து அந்த தூண்டுதலுக்கேற்ற செயல்பாட்டைச் செய்யக்கூடிய நுட்பமே சென்சார் தொழில்நுட்பம். 

சென்சார் தொழில்நுட்பமானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சிப்பெற்று வருகிறது. 

Ambient Light Sensor- ஒளி உணர்வலை: 


தற்போதுள்ள ஸ்மார்ட்போன் சாதனங்களான டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. 

டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

Proximity sensor - அருகமைவு உணர்வலை 


இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் தொடுதிரை தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. உங்களுக்கு வரும் போன் கால்களை நீங்கள் அட்டண்ட் செய்து பேசும்பொழுது, காதில் பட்டு, தேவையில்லாத அப்ளிகேஷன்கள் திறப்பதை தடுப்பதற்கான  சென்சார்நுட்பம் இது. 

நீங்கள் உங்களுக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்கு காதருகே ஸ்மார்ட்போனை கொண்டு செல்லும்பொழுது தானாகவே ஸ்கிரீன் லாக் ஆகிவிடும். அதனால் எந்த ஒரு அப்ளிகேஷனும் காதில் பட்டு திறக்காது.  பேசி முடித்த பிறகு, காதிலிருந்து ஸ்மார்ட்போனை விலக்கும்போது  தானாகவே மீண்டும் தொடுதிரை பயன்பாட்டுக்கு வந்துவிடும். 

GPS Global Positioning System- புவி இட நிறுத்தல் 


இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.  சில வருடங்களுக்கு முன்பே பொதுமக்களுக்கும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.  

நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது. இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான செயற்கைகோள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. 

அசிஸ்ட்டட் ஜிபிஎஸ் - Assisted GPS 


அஸிட்டட் என்ற புதிய தொழில் நுட்பமும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அலைபேசிகள் நெட்வொர்க்குகள் நேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. 

iPhone 3G, 3GS, iPhone4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. iPhone 4 S, GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.

Accelerometer- அக்ஸிலரோமீட்டர் 


ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. 

இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

Compass -காம்பஸ் 


காம்பஸ் என்பது புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட்போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது. 

Other Sensor Technology: மற்ற சென்சார் நுட்பங்கள்


மேலும் gyroscope, BSI போன் சென்சார் தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுபவை. 

தொடர்ந்து சென்சார் தொழில்நுட்பமானது பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சியுற்று வருகிறது. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பமானது மேலும் ஆச்சர்யமிக்க பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மைக்ரோமேக்ஸ் Canvas Juice A77 ஸ்மார்ட்போன் விவர குறிப்புகள்


Micromax  - மைக்ரோமேக்ஸ்


இந்தியாவின் முன்னணி கைபேசி நிறுவனம் மைக்ரோமேக்ஸ். இந்நிறுவனம் பல்வேறு தரப்பட்ட ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் போன்ற தகவல்தொடர்பு சாதனங்களை வெளியிட்டுள்ளது. நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை தீர்க்கும் வகையில் இதன் தயாரிப்புகள் அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் புதிய பட்ஜெட் போன் ஒன்றினை  அறிமுகப்படுத்தியுள்ளது.

Micromax Canvas Juice A77 புதிய ஸ்மார்ட்போன்


மைக்ரோமேக் வெளியிட்டுள்ள அப்போனின் பெயர் மைக்ரோமேக்ஸ் ஜூஸ் ஏ77. இது நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. விலையும் வாங்க கூடிய வகையில் குறைவாக இருப்பதால் இதை "பட்ஜெட் ஸ்மார்ட்போன்" வகையில் சேர்க்கலாம்.

Micromax Canvas Juice A77 - அம்சங்கள்: 


இந்த ஸ்மார்ட் போன் Android 4.2 Jelly OS ல் இயங்குகிறது. 

5 அங்குல FWVGA Display கொண்டுள்ளது (480x854 pixels),  1 GB RAM  உடன் 1.3GHz mediatex 6572 processor இணைந்து  இயங்குகிறது. LED Flash மற்றும் autofocus வசதிகொண்ட 5 மெகா பிக்சல் கேமரா, VGA முன்புற கேமரா ஆகியனவும் இதில் அமைந்துள்ளது.

micromax canvas a77 specs and price


GSM+GSM வசதியுடன் கூடிய இரட்டை சிம் பயன்படுத்தக்கூடிய வசதியும் இதில் உண்டு. 4GB உள்ளக சேமிப்பு நினைவகம், MicroSd Card மூலம் 32 GB வரைக்கும் விரிவாக்கம் செய்யத்தக்க Internal Memory வசதியும் உண்டு. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஸ்மார்ட்போன் பாகங்களுக்குத்தேவையான மின்சக்தியை வழங்குவதற்கான சக்திமிக்க 3000 mAh Battery ம் உண்டு.

கூடுதல் வசதிகள் 


கனக்ட்டிவிட்டி (Network connectivity) பயன்பாடுகளுக்குப் பயன்படும் Wi-Fi, GPRS, EDge, GPS, AGPS, 3G மற்றும் 2G நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் வசதியும் இதில் உண்டு. இதன் எடை 100 கிராம். பரிமாண அளவு 150.5x76.2x10.2mm.



விவரக் குறிப்புகள் ஆங்கிலத்தில்: 


Micromax Canvas Juice A77 is an Android Smartphone Powered by 1.3 GHz Dual Core Processor, Android 4.2.2 Jelly Bean, 3000 mAh Battery and 5 MP Camera.

Micromax A77 Canvas Juice Smartphone Specifications 



  • 1.3 GHz MTK 6572 Dual Core Processor
  • 1 GB RAM
  • 5 Inch Touchscreen Display
  • Dual SIM support (GSM+GSM)
  • 5 MP Rear Camera With LED Flash
  • 0.3 MP Front Camera
  • 2G,3G,WiFi
  • Bluetooth, FM, 
  • 3000 MAh Battery
Tags: micromax smartphone, new micromax smartphone, canvas juice a77, budget smartphone, micromax budget smartphone, android smartphone, android, specifications, smartphone specifications.

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க காரணங்கள் - தீர்வுகள்

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க காரணங்கள்:


புது கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும். அதுவே நாளாக நாளாக அப்படியே நத்தை வேகத்தில் இயங்கும். இதற்கு காரணமென்ன?

முழுமுதற் காரணம் சரியான, முறையான பராமரிப்பு இன்மைதான். வேறு சில காரணங்களாலும் கம்ப்யூட்டரானது மெதுவாக இயங்கும். கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கு காரண்ங்களும், தீர்வுகளும் கீழே.


கம்ப்யூட்டர் பராமரிப்பு (Computer Maintenance): 


கம்ப்யூட்டரை முறையாக பராமரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இணையத்தையும் கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நிச்சயம் வைரஸ் பிரச்னைகளுக்கு உட்படும். எனவே முதலில் நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவுவது அவசியம். 

இலவச மென்பொருட்கள் வேண்டாம்: 


Don't Use FreeWare

இணையத்தில் எத்தனையோ இலவச மென்பொருட்கள் உள்ளன. அவை அனைத்தும் நம்பகமாவை இல்லை. இலவசமாக தரவிறக்கம் செய்யும் எந்த ஒருமூன்றாம்தர மென்பொருளும், அதனுடன் இணைந்த மால்வேர், ஸ்பேர், ஆட்வேர் என்ற நிரல்கள் இல்லாமல் இருக்காது. முடிந்தளவு இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 

Hard Disk - ல் அதிக கோப்புகள்: 


இப்படி நிறைய மென்பொருட்கள், மற்றும் கோப்புகள் ஹார்ட் டிஸ்க்கில் சேர்வதால் ஹார்ட் டிஸ்கின் காலியிடம் குறைந்துவிடுதல். இதனால் கணனியின் செயல்பாட்டு வேகம் குறைந்துவிடும். நீங்கள் Operating System பதிந்திருக்கும் Drive- ல் கால் பகுதிய காலியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக C டிரைவில்தான் இயங்குதளத்தைப் பதிந்து வைத்திருப்பார்கள். கூடவே My document, Download Folder ம் C ல்தான் இருக்கும். 

இந்த இரண்டு போல்டர்களிலும் சேமித்து உள்ள கோப்புகளை அடிக்கடி சோதனை செய்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக சேமிக்கும் கோப்புகள், தரவிறக்கும் மென்பொருட்கள் அனைத்துமே இந்த போல்டர்களில்தான் சேமிக்கப்பட்டிருக்கும். 

அவைகள் தேவையில்லை எனில், அல்லது அதிகமாக பயன்படுத்தாத கோப்புகளாக இருப்பின் அவற்றை வேறொரு டிரைவிற்கு Cut செய்து Paste செய்து மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் அந்த போல்டரிகளில் அடைந்துள்ள இடமானது காலியாகும். 

நிறைய கம்ப்யூட்டர் பயனர்கள் இணையத்தில் உள்ளபோது ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது கோப்புகளையோ டவுன்லோட் செய்து சேமித்துவிட்டு, பிறகு தேவையில்லாத போதும் அவற்றை அந்த போல்டரில் இருந்து நீக்கமலே வைத்திருப்பார்கள். இதனால் அங்கு கோப்புகள் நிறைந்து அதிகமான எடுத்துக்கொண்டிருக்கும். 

இந்தகாரணங்களாலேயே கம்ப்யூட்டர் மிக மெதுவாக செயல்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டு, அக்கோப்புகளை வேறொரு டிரைவிற்கு மாற்றிவிடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். 

Device களில் ஏற்படும் பிரச்னை


Device களில் ஏற்படும் பிரச்னைகளும் ஒரு காரணமாக அமையலாம். உங்களது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களில் ஏதேனும் பிரச்னை என்றாலும் உங்களுடைய கம்ப்யூட்டார் மெதுவாக இயங்கும்.


  • இப்பிரச்னையைத்தீர்க்க My computer - ன் மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்து Device Manager என்பதை தேர்ந்தெடுங்கள்.
  • இப்பொழுது தோன்றும் Device பகுதியில் மஞ்சள்நிற கேள்விக்குறிகளோடு ஏதேனும் டிவைஸ்கள் தோற்றமளித்தால் அவற்றின் மீது கிளிக் செய்து ரீமூவ் செய்திடுங்கள்.
  • சிவுப்பு நிற பெருக்கல் குறிபோன்று தோன்றிட்டால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Enable கொடுக்கவும். 
  • இந்த இரண்டு வழிமுறைகளையும் செய்துவிட்டு உங்கள் கணினியை Restart கொடுக்கவும். 
  • இப்பொழுது அனைத்தும் சரியாகி இருக்கும். 
  • அவ்வாறு ரீஸ்டார்ட் கொடுத்தும் டிவைசின் மீது சிறிய அம்புக்குறிப்போல தோற்றமளித்தால் அதில் பிரச்னை உள்ளது என்று பொருள். எனவே அதற்கான புதிய Driver -ஐ இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டர் வெப்பமடைதல்: 


கம்ப்யூட்டர் சூடாவதற்கு காரணங்கள் நிறைய உண்டு. அதிக நேரம் பயன்படுத்துதல், கம்ப்யூட்டரில் உள்ள வெப்பம் குறைக்கும் காற்றாடிகள் செயலிழத்தல், தூசிகள், processor வெப்பமடைதல் போன்றவை.

அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருப்பின் சிறிது நேரம் ஷட்டவுன் செய்துவிட்டு பயன்படுத்தலாம்.
வெப்பம் குறைக்கும் காற்றாடிகளில் பிரச்னை எனில் உடன் அதை மாற்ற வேண்டும்.
தூசிகள் போன்றவற்றால் பிரச்னை எனில் கம்பஃயூட்டர் கேபினை திறந்துவிட்டு, காற்று ஊதி மூலம் தூசிகளைப் போக்கி சுத்த படுத்தலாம்.

கம்ப்யூட்டர் சுத்தம்: 


கம்ப்யூட்டரில் உள்ள தூசிகள் மற்றும் குப்பைகளை காற்றை ஊதி சுத்தம் செய்வதைப் போல, கம்ப்யூட்டரில் இருக்கும் குப்பையான தேவையற்ற கோப்புகளை நீக்க CCleaner போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். Registry Clean செய்வதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் விரைவாக, வேகமாக செயல்படும்.


Hardware பிரச்னைகள்

மேற்குறிப்பட்ட குறிப்புகளை சரியாக செய்து முடித்தவுடன் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு இருந்ததை விட அதிக வேகத்ததுடன் செயல்படுவதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.. இவற்றைச் செய்தும் உங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கியதெனில் Computer Service Center கொண்டு சென்று mother board, hard drive, ram, processor போன்ற உள்பகுதியில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று சோதனை செய்து, பிரச்னை ஏதேனும் இருந்தால் அவற்றை புதியதாக மாற்றிக்கொள்வதே சரியான வழி.

கணினி நினைவகத்தை பாதுகாக்கும் மென்பொருள்

கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.

இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.

ram-optimizer-for-your-pc


விண்டோஸ் இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது. இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது. 


இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:

http://www.maxpcsecure.com/maxramoptimizer/

Watch Madha Yaanai Koottam Movie Online

Watch Madha Yaanai Koottam Movie 2013 Online HQ, Madha Yaanai Koottam GooD Quality Tamil New Movie Online Watch Madha Yaanai Koottam Movie 2013 Online VCD, Watch Madha Yaanai Koottam Movie 2013 Online HQ, Madha Yaanai Koottam Movie 2013 Online, Madha Yaanai Koottam Movie Online VCD, Madha Yaanai Koottam Movie Online, Watch Madha Yaanai Koottam Movie DvD, Watch Madha Yaanai Koottam Movie HQ






Friday, December 27, 2013

Naveena Saraswathi Sabatham Movie






Endrendum Punnagai Watch Movie online








Dhoom-3 Movie

Wednesday, December 25, 2013

Samsung நிறுவனத்தின் Chromebook series 3 சிறப்பம்சங்கள்..!

உலகின் மிக பிரபலமான தேடல் இயந்திர இணையதளம் கூகிள். இந்நிறுவனம் தரும் இலவச வசதிகள் எண்ணற்றது. ஜிமெயில், பிளாக்கர், யூடியூப், Google Drive, Calendar, Search, Image, Google Play போன்ற பல்வேறுபட்ட இலவச வசதிகளை பயனர்களுக்குத் தருவதோடு, ஆண்ட்ராய்ட் இயங்குதளம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப் என்று பல்வேறு சாதனங்களையும் வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் சாம்சங் குரோம்புக் என்ற புதிய லேப்டாப்பை வெளியிட்டுள்ளது. 




இதன் விலை ரூபாய் 26,999 ஆகும். தற்போதைய விலை ரூபாய் 19,995 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 

இதற்கு முன்பு Acer Chromebook, HP ChromeBook ஆகியவைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மூன்றாவதாக வெளியிடப்பட்ட இந்த சாம்சங் லேப்டாப்பில் குரோம் புக் ஓ.எஸ் இயங்குகிறது. 

இதில் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் புரோகிராம்களை இயக்கவியலாது. 

சாம்சங் குரோம்புக்கில் உள்ள சிறப்பம்சங்கள்: 


11.6 அங்குல திரை, 1.7GHz Exynos 5 டூயல் பிராசசர் , குரோம்புக் 2ஜிபி, எஸ்எஸ்டி 16GB, 1.1 கிலோகிராம் எடை, லேப்டாப்பில் உள்ள அனைத்து கணினிப் பகுதி உறுப்புகளுக்கும்  மின்சாரத்தை வழங்க கூடிய சக்தி மிக்க பேட்டரி அமைந்துள்ளது. 

Samsung Chromebook specification


  • வேகமாக செயல்புரியும் தன்மை. 
  • விரைவான இணைய செயல்பாடு...
  • Multiple layers பாதுகாப்பு
  • web based பணிகளுக்கு மிகச்சிறப்பானதொரு கம்ப்யூட்டர் இதுவாகும். 
  • இதை இணைய இணைப்பில் இணைக்கும்பொழுது சிறப்பாக செயல்படுகிறது. 
  • Cloud முறையில் சேமிக்கும் வசதியும் இதிலுண்டு. 

தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?

தனி மனித வாழ்வில் அழகைக் கொடுக்கும் விடயம் ஒன்று உண்டென்றால் அது தலைமுடிதான். உடலின் நிறம் எதுவாக இருந்தாலும் தலையில் அதிக முடியுடன் சிலுப்பிக்கொண்டு செல்லும் அழகே தனிதான்.

அது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும். அடர்த்தியான தலைமுடிதான் அழகைத் தரும். அடர்த்தியாக தலைமுடி கொண்டவர்களின் முகத்தோற்றமே ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும்.


முகத்தோற்றத்தை தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக முடி விளங்குகிறது. இவ்வளவு பெருமை மிக்க தலைமுடி ஒரு சிலருக்கு அதிகம் கொட்டும். ஒரு சிலருக்கு இலேசாக  முடிகொட்டும். முடிக்கொடுவதற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள், யுவதிகளின் மத்தியில் முடி பராமரிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம். காரணம் அவசர உலகம்... கண்ட கண்ட விளம்பரங்களில் வரும் ஷேம்பு வகைகள், ஹேர் லோஷன்கள், ஹேர் ஜெல்கள்தான்.

இயற்கையான முறையில் கூந்தலை பராமரிக்க அவர்களுக்கு நேரமுமில்லை..

இதுமட்டும்தான் முடி கொட்டுவதற்கு காரணமா? இன்னும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பார்ப்போம்.

முடிகொட்டுவதற்கான காரணங்கள்: (Reasons for Hair Falling )

பரம்பரை: (Descent)

வழி வழியாக பரம்பரை மூலம் வருவது. உடலில் உள்ள மரபு ஜீன்கள் மூலம் முடிகொட்டும் பிரச்னை தொடரும். இதை தடுக்க முடியாது. என்றாலும் முடிகொட்டுவதை மிக குறைந்த அளவாக குறைக்க முடியும்.

ஹேர்ஸ்டைல்: (Hairstyle:)

நீங்கள் அழகு நிலையங்களில் உங்கள் கூந்தலுக்கு சாயமேற்றுதல், சுருள் முடியாக்குதல், கூந்தலை நேராக்குதல் போன்றவைகளை அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்படியெனில் வெகு விரைவில் நீங்கள் உங்கள் தலைமுடியை இழக்க வேண்டியதுதான்.

இதனால் கூந்தலில் உலர்வுத் தன்மை ஏற்பட்டு கூந்தல் உதிர்வது அதிகரிக்கும்.

ஹார்மோன் : (Hormone)

வழக்கத்துக்கு மாறான ஹார்மோன் மாற்றங்களால் முடி உதிர்வு ஏற்படும்.  பிரசவ காலங்களில் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னை இருக்கும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் நிகழும். தைராய்டு பிரச்னையால் முடிகொட்டும்.

இராசயனங்கள்: (Chemicals:)

வேதிப் பொருட்களால் முடி கொட்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இது அதிகமாக இருக்கும். காரணம் இராசயணம், வேதிப்பொருட்களால் உடல் அதிக வெப்பமடைவதோடு, தலை முடியும் தனது வேர்கால்களின் வலுவை இழக்கிறது.

மேலும் தற்காலத்தில் பயன்படுத்தும் அனைத்து ஷாம்பு வகைகள், கண்டீஷனர் வகைகளாலும் தலைமுடி பாதிக்கப்பட்டு கொட்ட ஆரம்பிக்கிறது.

உணவு வகைகள்: (Cuisine types:)

பாக்கெட் உணவு வகைகள் எடுத்துக்கொள்பவர்கள் முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருக்கும். காரணம் இவர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும இந்த பாக்கெட் உணவு வகைகளில் கிடைப்பதில்லை. அதனால் முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

சுற்றுப்புறச்சூழ்நிலை, வெப்பம்; (The environment, heat;)

சுற்றுப்புறச்சூழ்நிலைகளாலும் (தூசிகள், அழுக்குகள்), வெப்பம் மிகுந்த வானிலையாலும் தலைமுடி அதிக வெப்பமடைந்து சிதைவுற்று, உடையும் தன்மை ஏற்படும். இதனாலும் அதிகமாக முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

ஆண்கள்: Hair loss for men 

பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் முடி கொட்டுகிறது. காரணம் இயற்கையான உடலமைப்பு மற்றும் ஹார்மோன் விகிதங்கள் மாறுபாடு.

தூக்கமின்மை: (Insomnia)

சாதாரணமாகவே தூக்கமின்மையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். சீரற்ற தூக்கம், அதிக தூக்கம், போதுமான அளவு தூக்கமில்லாமலை ஆகிய காரணங்கள் முடிகொட்டும். சீரற்ற தூக்கத்தின் வெளிப்பாடாக முடிகள் அதிக அளவு கொட்டத்தொடங்கும். விரைவில் வழுக்கை தலையாக மாறிவிடும்.

மருந்துகள், மாத்திரைகள்: (Medicines, tablets:)

உடல் நோய்களைத் தீர்க்க எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளில் முக்கியமானது முடி கொட்டுதல். எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தைப் பொறுத்து முடிகொட்டும் பிரச்னை இருக்கும்.

மன அழுத்தம்: (Mental stress:)

உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தாலும், மன ரீதியாக அதிக உளைச்சல், மன அழுத்தம் ஆகியவைகளால் முடி கொட்டும்.