இணைய உலகமே ஷேர்களாலும் லைக்குகளாலும் தான் இயங்கி கொண்டிருக்கிறது. பேஸ்புக்கில் இத்தனை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்றும், இன்ஸ்டாகிராமில் பல்லாயிரம் முறை பகிரப்பட்ட புகைப்படம் என்று சொல்லப்படுவதை எல்லாம் அடிக்கடி படிக்கிறோம். சரி, இன்ஸ்டாகிராமில் ஒரு லைக் கூட வாங்காத புகைப்படங்களை நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா?
இப்படி ஒருவருமே பார்த்திராத இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்காக என்றே அமெரிக்காவின் டிம் ஹெட்லர் மற்றும் டேனியல் சுமார்னா, தால் மிட்யான் ஆகியோர் இணைந்து ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். நோலைக்ஸ்யெட் என்பதுதான் தளத்தின் முகவரி: http://www.nolikesyet.com/#/. சென்று பாருங்கள். முடிந்தால் லைக் செய்யுங்கள். அதற்கு முன் இன்ஸ்டாகிராமில் உறுப்பினராக இருக்க வேண்டும் !.
0 comments:
Post a Comment