உங்கள் கணனியை வைரஸ் தாக்கியவுடனே, கணனியின் செயல்பாடுகள் படிப்படியாக முடக்கப்படும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும்.
இறுதியில் மொத்தமாக முடக்கப்படும் போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
எனவே நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்த உடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன.
இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன.
முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன.
அதாவது பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்களை “பேட்ச் பைல்” என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன.
இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நமது கணனியில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள்.
0 comments:
Post a Comment