Thursday, December 24, 2015

ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோன் உண்டா?

ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் ஐஓஎஸ் 8 அறிமுகமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐபோன் 6,ஐபோன் பிளஸ் முன்பதிவில் 40 லட்சம் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பலர் ஐபோன் 5 உள்ளிட்ட பழைய மாதிரியை தூக்கி எறிந்து விட்டு புதிய ஐபோனுக்கு மாறத்தயராக இருக்கின்றனர் என்பதுதான். என்ன செய்வது ஐபோன் மோகம் அப்படி?
ஆனால் ஐபோனை தோற்றத்திலும் செயல்பாட்டிலும் நேரத்தியாக உருவாக்கி இந்த மோகத்தை ஏற்படுத்திய ஆப்பிளின் சி.இ.ஒவாக இருந்த மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோனுக்கோ ,ஐபேடிற்கோ அனுமதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நிக் பில்டன் இந்த சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். 2010 ல் ஜாப்சை பேட்டி கண்ட பில்டன், உங்கள் பிள்ளைகள் ஐபேட் பற்றி என்ன சொல்கின்றனர் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜாப்ஸ், அவர்கள் ஐபேடை பயன்படுத்தியதில்லை என்று கூலாக கூறியிருக்கிறார். வீட்டில் பிள்ளைகளின் தொழில்நுட்ப பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாகவும் ஜாப்ஸ் கூறியுள்ளார்.
ஜாப்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாகசனும் ஜாப்ஸ் வீட்டு பிள்ளைகள் தொழில்நுட்ப சாதனங்களின் மோகம் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல மிகச்சிறந்த தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு ஆசிரியர் கிறிஸ் ஆண்டர்சன் மற்றும் டிவிட்டர் சி.இ.ஓ டிக் காஸ்டெலா ஆகியோர் வீட்டிலும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்று பில்டர் தெரிவித்துள்ளார். எப்படி இருக்கிறது ? நிற்க, ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றி அறிய ஆர்வமா? அழகாக ஒரே வரைபட சித்திரமாக ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள இதோ வழி: http://www.makeuseof.com/tag/life-steve-jobs-apples-founder/

0 comments:

Post a Comment