Sunday, December 27, 2015

90 நாடுகளுக்கு இலவசமாக போன் செய்வது எப்படி ? Free Calls To 90 Countries !

ற்போது  அறிமுகமாகியுள்ள  லிபோன்  என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு  இலவசமாக  கால்  செய்து  கொள்ளலாம். புதிதாக பதிவு செய்யும் ஒவ்வொரு நபருக்கும் முதல் 3 மாதத்திற்கு இலவசமாக போன் கால் சேவையை தருகின்றது  இந்த  லிபோன்  சர்வீஸ்.

Download Link : http://www.libon.com/en/cheap-international-calls இப்பொழுதே  இன்ஸ்டால்  செய்து  கொண்டு  உங்கள்  பணத்தை  மிச்சப்படுத்துங்கள்… மலேசியா  சிங்கப்பூர்  அமெரிக்கா , லண்டன்,   ஹாங்காங் இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு இலவசாக போன் செய்யலாம்.

AFRICA All landlines and mobiles in 7 countries from Africa: Angola, Egypt, Mayotte, Namibia, Nigeria, Reunion & South Africa All landlines in these 2 North African countries: Algeria & Morocco AMERICA All landlines and mobiles in 21 American countries: Alaska, Argentina, Brazil, Canada, Chile, Colombia, Costa Rica, Dominican Republic, French Guiana, Guadeloupe, Guatemala, Hawaii, Martinique, Mexico, Paraguay, Peru, Puerto Rico, Saint-Pierre et Miquelon, Unites States, Uruguay & Venezuela All landlines in 2 other American countries: Bolivia & Ecuador ASIA & OCEANIA All landlines and mobiles in 24 Asian countries: Australia, Bangladesh, Cambodia, China, Hong Kong, India, Indonesia, Iran, Israel, Japan, Jordan, Laos, Malaysia, New Zealand, Pakistan, Philippines, Singapore, South Korea, Sri Lanka, Taiwan, Thailand, Turkey, Uzbekistan & Vietnam All landlines in Kazakhstan. EUROPE All landlines and mobiles in 33 European countries: Andorra, Austria, Belgium, Bulgaria, Cyprus, Croatia, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland, Italy, Lithuania, Luxembourg, Malta, Norway, Netherlands, Poland, Portugal, Czech Republic, Romania, Russia, Slovakia, Slovenia, Spain, Sweden, Switzerland, Ukraine, United Kingdom & Vatican. மேலும் whatsapp போன்று இந்த மென்பொருளை பயன் படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு புகைப்படங்கள் ,  sms ,  அனுப்பிக் கொள்ளலாம்.


Thursday, December 24, 2015

பேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்! எச்சரிக்கை தகவல்

உங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colour Scheme) மாற்ற முயற்சித்தது உண்டா?
ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.
இதன் மூலம் புதிய வைரஸ் உலா வந்து கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பேரின் பேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை பேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது.
இதனை பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசைத்திருப்பப்படுகிறது, கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது.
ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது.
எனவே உடனடியாக இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் அழித்துவிட்டு, பேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும் என்று சீனாவில் இணையம் நிறுவனமான சீட்டா மொபைல் தகவல் வெளியிட்டுள்ளது.

மென்பொருள் இல்லாமல் HUAWEI DONGLE இலவசமாக அன்லாக் செய்வது எப்படி?

நீங்கள் பாவிக்கும் Huawei DOngle களை இலவசமாக அதுவும் மென்பொருள் அறிவின்றி அன்லாக் செய்ய ஆசையா? இதோ அதற்கான ஒரு இலவச இணையத்தளம்.

முதலில் www.uaweicodecalculator.com சென்று கொள்ளுங்கள். அதில் Login  ஆவதற்கு ஒரு GOOGLE  எக்கவுண்ட் போதுமானது. உள்நுளைந்த பின் உங்கள் Dongle இன் IMEI நம்பரை கொடுத்து Model நம்பரையும் கொடுங்கள்.

இப்பொழுது உங்கள் Dongle தயாராகி விடும்.

அதில் Unlock code எடுத்து உங்கள் Dongle இல் வேறு சிம் கார்ட் போடும் பொழுது  Code கேட்கும் அந்த இடத்தில் இதை ரைப் செய்தால் உங்கள் டாங்கிள் தயாராகி விடும்.

குறிப்பு: ஒரு GOOGLE ID
பாவித்து 5 தடவை மத்திரமே அன்லாக் செய்ய முடியும்.

உங்கள் கணனியை வைரஸ் தாக்கிவிட்டதா? கண்டுபிடிக்க சூப்பர் வழி

உங்கள் கணனியை வைரஸ் தாக்கியவுடனே, கணனியின் செயல்பாடுகள் படிப்படியாக முடக்கப்படும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும்.
இறுதியில் மொத்தமாக முடக்கப்படும் போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
எனவே நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்த உடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன.
இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன.
முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன.
அதாவது பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்களை “பேட்ச் பைல்” என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன.
இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நமது கணனியில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள்.

ஒருவரும் பார்க்காத புகைப்படங்கள்!

இணைய உலகமே ஷேர்களாலும் லைக்குகளாலும் தான் இயங்கி கொண்டிருக்கிறது. பேஸ்புக்கில் இத்தனை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்றும், இன்ஸ்டாகிராமில் பல்லாயிரம் முறை பகிரப்பட்ட புகைப்படம் என்று சொல்லப்படுவதை எல்லாம் அடிக்கடி படிக்கிறோம். சரி, இன்ஸ்டாகிராமில் ஒரு லைக் கூட வாங்காத புகைப்படங்களை நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா?
இப்படி ஒருவருமே பார்த்திராத இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்காக என்றே அமெரிக்காவின் டிம் ஹெட்லர் மற்றும் டேனியல் சுமார்னா, தால் மிட்யான் ஆகியோர் இணைந்து ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். நோலைக்ஸ்யெட் என்பதுதான் தளத்தின் முகவரி: http://www.nolikesyet.com/#/. சென்று பாருங்கள். முடிந்தால் லைக் செய்யுங்கள். அதற்கு முன் இன்ஸ்டாகிராமில் உறுப்பினராக இருக்க வேண்டும் !.

ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோன் உண்டா?

ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் ஐஓஎஸ் 8 அறிமுகமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐபோன் 6,ஐபோன் பிளஸ் முன்பதிவில் 40 லட்சம் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பலர் ஐபோன் 5 உள்ளிட்ட பழைய மாதிரியை தூக்கி எறிந்து விட்டு புதிய ஐபோனுக்கு மாறத்தயராக இருக்கின்றனர் என்பதுதான். என்ன செய்வது ஐபோன் மோகம் அப்படி?
ஆனால் ஐபோனை தோற்றத்திலும் செயல்பாட்டிலும் நேரத்தியாக உருவாக்கி இந்த மோகத்தை ஏற்படுத்திய ஆப்பிளின் சி.இ.ஒவாக இருந்த மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோனுக்கோ ,ஐபேடிற்கோ அனுமதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நிக் பில்டன் இந்த சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். 2010 ல் ஜாப்சை பேட்டி கண்ட பில்டன், உங்கள் பிள்ளைகள் ஐபேட் பற்றி என்ன சொல்கின்றனர் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜாப்ஸ், அவர்கள் ஐபேடை பயன்படுத்தியதில்லை என்று கூலாக கூறியிருக்கிறார். வீட்டில் பிள்ளைகளின் தொழில்நுட்ப பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாகவும் ஜாப்ஸ் கூறியுள்ளார்.
ஜாப்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாகசனும் ஜாப்ஸ் வீட்டு பிள்ளைகள் தொழில்நுட்ப சாதனங்களின் மோகம் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல மிகச்சிறந்த தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு ஆசிரியர் கிறிஸ் ஆண்டர்சன் மற்றும் டிவிட்டர் சி.இ.ஓ டிக் காஸ்டெலா ஆகியோர் வீட்டிலும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்று பில்டர் தெரிவித்துள்ளார். எப்படி இருக்கிறது ? நிற்க, ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றி அறிய ஆர்வமா? அழகாக ஒரே வரைபட சித்திரமாக ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள இதோ வழி: http://www.makeuseof.com/tag/life-steve-jobs-apples-founder/