முகநூலினை பற்றி ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன், எனவே முகநூல் பற்றிய முன்னுரை ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன். முகநூல் முதன்முதலில் பயன்படுத்தும் போது நமக்கு முன் அறிமுகம் இல்லாத நண்பர்கள் பலரையும், நண்பர்களாக்கிவிடுவோம் இதற்கு முக்கிய காரணமே நமக்கு இணையத்தை பற்றியும் முகநூல் பற்றியும் முழுமையாக அறிந்திருக்காமை, பிற்காலத்தில் இவை இரண்டையும் சரி வர புரிந்துகொண்டு பயன்படுத்தும் காலத்தில் தேவையற்ற நண்பர்களை நீக்க நிணைப்போம் ஆனால் நம்முடைய முகநூல் கணக்கில் என்னற்ற தேவையற்ற நண்பர்கள் பலர் இருப்பார்கள், இவர்களை நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஒவ்வொருவராக மட்டுமே நீக்கம் செய்ய முடியும். இதனால் கால விரயமும் மனரீதியான உளைச்சலுமே ஏற்படும். இதுபோன்ற தேவையற்ற நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தேன் ஒரு வழி கிடைத்தது அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் கூறும் இந்த வழிமுறை நெருப்புநரி உலாவிக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.
முதலில் நெருப்புநரி உலாவியை திறக்கவும், பின் Greasemonkey நீட்சியை நெருப்பு உலாவியில் இணைத்துக்கொள்ளவும்.
Greasemonkey நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைப்பதற்கான Link
சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைத்த பிறகு ஒரு முறை நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பிறகு Delete Facebook Friends என்ற பயனர் நீட்சியை நெருப்புநரி உலாவியில் நிறுவ வேண்டும்.
Delete Facebook Friends பயனர் நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைப்பதற்கான Link
பின் மீண்டும் ஒரு முறை நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு, உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழையவும். பின் நண்பர்கள் பக்கத்திற்கு செல்லவும். அப்போது நீங்கள் உங்கள் நண்பர்களை குழுவாக நீக்குவதற்கான இணைப்புகளை காண முடியும்.
இப்போது உங்களுக்கு தேவையற்ற நண்பர்களை குழுவாக தேர்ந்தெடுத்து நீக்கி கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment